அறச் சீற்றம்
வாய்மை உரைக்கத் தயங்கி யதில்லை
பொய்மை கடியப் பயந்ததும் இல்லை
எதிரில் உள்ளோர் எத்தனை பேர்கள்
எண்ணிக்கை கண்டு தளர்ந்ததும் இல்லை
சிறுமை கண்டு சீறியதுண்டு
அற்பர்கள் முன்பு தோற்றதும் உண்டு
சிந்தையும் செயலும் அறம் சார்ந்திருப்பின்
நிந்தைகள் நம்மைத் தொடாது நிச்சயம்
தர்மம் தன்னைப் பற்றியே வாழ்ந்தால்
தோல்விகள் கண்டு துவளாதிருப்போம்

