கம்யூனிஸம்
மலையாளப்
படங்கள் இன்னும் பார்த்துக் கொண்டே
இருந்தால் நானும்
கம்யூனிசத்தைக் காதலிக்க
ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது. அரபிக்கதா படம்
பார்த்தேன். மலையாளிகளுக்கு
இந்த ஸப்ஜெக்ட் அல்வா சாப்பிடுகிற மாதிரி.
பொதுவாகக் கம்யூனிசக்
கோட்பாடுகளோடு உடன்படாதவன்
நான். அதற்காகக் கம்யூனிஸ்டுகளின் எதிரியும்
இல்லை. வாழ்வாதாரங்கள் அருகும்போது உரிமைகள்
மறுக்கப் படும்போது போராட்ட
உணர்வு தோன்றும். இந்த உணர்வுக்கு அரசியல்
இட்ட பெயர்தான் பொதுவுடைமை .
படத்திற்கு
வருவோம். சற்றே பிரச்சார வாடை
வீசினாலும் கொஞ்சம் சினிமாத் தனம்
இருந்தாலும் அருமையான படம். என்னைப் பாதித்தது ஸ்ரீனிவாசனின் கிளைமாக்ஸ் வசனம்.
"உழைப்பின்
அருமை அறியாத, சிறிய லாபத்திற்காக
எதையும் சமரசம்
செய்து கொள்கிற , ஊ ழலைக் கண்டும் காணாமல்
இருக்கிற பூமிக்கு நான் ஏன் திரும்ப
வேண்டும்".
உண்மை.
ஸாமர்த்தியம் என்கிற
சொல்லுக்கு வித்தை அறிந்தவன் வேலை
தெரிந்தவன் என்ற அர்த்தம் மறந்து
ஏமாற்றுபவன் என்பதாகப் பொருள்
கொள்ளும் காலம் இது. ஏமாற்றத்
தெரியாதவன் உலகம் அறியாதவன் என்று
அனுதாபப் படுகிற சமுதாயம். ஸமர்த்தன் என்ற சொல் இன்று
பாராட்டில்லை. உங்கள் கேரக்டரைப்
பற்றிய விமர்சனம்.

