Friday, January 17, 2020

                    பாலகுமாரம்

இலக்கியம் தனக்கோர் இலக்கணம் உண்டு
இலக்கில்லா மக்களை நல்வழிப்படுத்தலாம்
விலங்கு போல்  மானிடர் வாழாமல் இருக்க
இலங்கு நன்னெறி புகல்வதே இலக்கியம்
செப்பிய பாதையில் சான்றோர் வழியில்
தப்பாமல் படைத்த வேதம் நின் நூல்கள்
விட்டுக் கொடுத்தலே காதல் என்பதை
தட்டிக் கொடுத்துச் சொன்னவன் நீயே
இல்வாழ்க்கை தன்னைத் தடம் மாறாமல்
நல் வாழ்க்கையாய் வாழ கீதை உரைத்தாய்
கற்றேன் பெற்றேன் வாழ்ந்தேன் நிறைவாய்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் மறவேன்
எழுத்தால் சித்தன் நீ; இதில் ஐயமில்லை
அழுத்திச் சொல்வேன் எங்கேயும் இதை நான்
கலங்கித் தவிக்கும் சம்சார வாழ்வில்
கலங்கரை விளக்கமே! நீ என்றும் வாழ்வாய்