#341
அமெரிக்காவில் வங்கிகள் வீழ்ச்சி தொடர்வது பற்றிப் பல கேள்விகள்
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் டாலரின் வீழ்ச்சியும் எதிர்பார்க்கப் பட்டதே
பொருளாதாரம் படித்தவர்கள் இதை எதிர்பார்த்தே இருந்திருப்பர்
அமெரிக்கா சூப்பர் பவரானது எப்படி என்று புரிந்து கொண்டால்தான் இது புரியும்
அதற்குக் கொஞ்சம் இரண்டாம் உலகப்போரின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணி தெரிய வேண்டும்
இது கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கும்
ஆரம்பிக்கலாமா 😃
#341
அமெரிக்கா என்ற சூப்பர் பவர்
பாகம் 1
இரண்டாம் உலகப்போரின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணி
இரண்டாம் உலகப் போருக்கு முன் பிரிட்டன் அதாவது இங்கிலாந்துதான் உலகின் பெரியண்ணன்
அமெரிக்காவையே ஆண்ட திமிரில் இருந்தது அந்நாடு
எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று சர்ச்சில் கொக்கரிக்குமளவுக்கு உலகம் பிரிட்டனிடம் அடிமைப்பட்டிருந்தது
பல நாடுகள் அதன் காலனிகள்
இரண்டாம் உலகப் போர் இதைப் புரட்டிப் போட்டது
ஜெர்மனியின் ராணுவ பலமும் அசராத தாக்குதலும் போர் வியூகமும் கட்டுப்பாடான ராணுவமும் உலக நாடுகளைத் திணற அடித்தன
ஒரு பக்கம் இத்தாலிய முசோலினியின் அட்டகாசம் வேறு
போலந்தையும் ஃபிரான்சையும் பிடித்தவனுக்கு இங்கிலாந்து ஒரு பொருட்டே இல்லை என அந்நாடு அஞ்சி நடுங்கியது
ஆனால் பிரிட்டனைக் கோழிக் குஞ்சு என வர்ணித்த ஹிட்லர் யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும் என ரஷ்யாவில் நுழைந்தான்
ரஷ்யாவிடம் படைபலம் இருந்த அளவுக்கு ராணுவத்துக்கு வேண்டிய சமாசாரங்கள் இல்லை. உணவு உடை ஷூக்கள் ஆயுதங்கள் எல்லாமே பற்றாக்குறை.
பல விதமான பிரச்னைகள் நேச நாடுகளுக்கு
அமெரிக்காவுக்கு பிரிட்டனின் பெரியண்ணன் போக்கு எரிச்சல்
போரை வென்றால் அதன் க்ரெடிட் இங்கிலாந்துக்குப் போய்விடும் என்ற பயம்
போருக்குப் பின் ஜெர்மனியை எப்படி நடத்துவது என்ற கேள்வி
ஐரோப்பாவில் பல பிரச்னைகள்
தவிர பிரிட்டனும் அமெரிக்காவும் கம்யூனிசத்தை ஏற்காத நாடுகள்
ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடு
இப்படிப் பொருந்தாக் கூட்டணி நேச நாடுகள் என்ற Allies.
ஆனால் ஹிட்லரின் கொடுமைக்கு முடிவு கண்டே ஆக வேண்டும் எனும் அவசியம் அவர்களை ஒன்றாக்கியது
டெஹ்ரான் கான்ஃபெரன்ஸ் எனும் சந்திப்புக்கு இந்த அவசியமே அடி கோலியது
இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும்
ஜெர்மனியின் தாக்குதலின் முழு வேகத்தைத் தாங்கியது ரஷ்யாதான்
ஆனால் உணவு ஆயுதம் மற்றும் யுத்தத் தளவாடங்களின் குறைவினால், பற்றாக்குறையால், தோற்கும் நிலையில் இருந்தது
ஆக இவற்றை சப்ளை செய்ய யாராவது முன் வர வேண்டுமே
அமெரிக்கா அதைச் செய்தது
காரணம் அமெரிக்காவின் தொழில் உற்பத்தி ப்ரம்மாண்டமானது
போரின் பெருமளவு தேவையை அது கவனித்துக் கொண்டது
டெஹ்ரான் கான்ஃபெரன்சின் முக்யத்வம் என்னவென்றால் இரண்டாம் உலகப் போரின் பல விஷயங்களை அது முடிவு செய்தது அதற்குக் காரணம் அதன் பொருளாதார பலம்
இரண்டாவது போர்முனை ஐரோப்பாவில் திறக்க முடிவானது இங்கேதான்
ரஷ்யாவின் ஆள் பலமுமில்லை அமெரிக்காவின் பொருள் பலமுமில்லை
எனவே பிரிட்டன் தன் ஆதிக்கத்தை இழக்க நேரிட்டது வாய் பொத்தி உட்கார வேண்டியதாயிற்று
பிரிட்டனைக் கீழே இறக்கிப் பெரியண்ணன் ஆனது அமெரிக்கா
இப்படிப் போர்த்தளவாடங்களின் உற்பத்தியால் முக்யத்துவம் பெற்ற அமெரிக்கா உலகப் போருக்குப்பின் எங்கேயாவது சண்டை மூட்டி விட்டு ஆயுதங்களை விற்பதே வழக்கமாகக் கொண்டது
ஏன்?
அமெரிக்கத் தொழில் உற்பத்தியின் அறுபது சதவீதம் போர்த் தளவாடங்களும் ஆயுதங்களுமே
பாகம் 2
அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவு
அமெரிக்காவின் உற்பத்தியில் 60% ஆயுதங்கள் என்றோம்
இது ஒரு டிஃபென்ஸ் செலவு
செனேட்டில் ஒப்புதல் பெற வேண்டும் ராணுவத்துக்காகச் செலவிட
சோவியத் யூனியன் இருந்தவரை பனிப்போரைக் காரணம் காட்டி ராணுவச் செலவும் ஆயுத உற்பத்தியும் நியாயப் படுத்தப்பட்டன, ரஷ்யாவுடன் போரே நடக்காதிருந்தும் கூட.
சோவியத் யூனியன் தகர்ந்த பின் ஆயுத உற்பத்தி கொள்முதல் இவற்றை நியாயப் படுத்த முடியவில்லை
செனேட் ஒப்புதல் தரவில்லை
ராணுவக் கொள்முதல் நின்றவுடன் பல ஆயுதத் தொழிற்சாலைகள் லே ஆஃப் பில் தொடங்கி மூடு விழா நடத்தின
60% என்பதை நினைவில் கொள்க
பல அமெரிக்கர்களுக்கு வேலை போனது
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது
இதை இன்றுவரை எந்த அமெரிக்க அதிபராலும் சரி செய்ய முடியவே இல்லை
தவிர சாஃப்ட் வேர் தொழிலில் இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்தனர்
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு இன்னும் குறைந்தது
மற்றொரு பெரிய இடியும் இறங்கியது
சீனாவிற்கு தமது தொழிற்சாலைகளை அமெரிக்க பிசினஸ்மேன்கள் மாற்றினர் தயாரிப்புச் செலவு குறைவு என்ற காரணத்தால்
பல ப்ராசஸ்களை அவுட் சோர்சிங் என்ற பெயரில் இந்தியாவுக்கு மாற்றினர்வேலை வாய்ப்பு மேலும் சரிந்தது அமெரிக்கனின் சராசரி வருமானம் அதல பாதாளத்தைத் தொட்டது
இங்கேதான் அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கை உள்ளே நுழைந்தது
அமெரிக்கப் பொருளாதாரம் செலவு சார்ந்தது
மக்கள் செலவு செய்தால் வளர்ச்சி எனும் நம்பிக்கை
எனவே வருமானத்தை அதிகரிக்காமல் வேலைவாய்ப்பை அதிகரிக்காமல் மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டிச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
அவை என்ன?
அமெரிக்கா என்னும் சூப்பர் பவர்
பாகம் 3
தவறான பொருளாதாரக் கொள்கை
பணப்புழக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா அதன் வங்கிகளை நாடியது
ரொம்பத் "தோண்டாமல்" கடன்களை அள்ளி வீசச் சொன்னது 😅
சாதாரணமாக அமெரிக்க வங்கிகள் படு ஸ்ட்ரிக்ட்
அவர்களைக் கண்ணை மூடிக் கொள்ளச் சொன்னது அமெரிக்கா
அவர்களும் அதிகம் கேள்விகள் கேட்காமல் லோன்களை "அள்ளி" விட்டனர்
குறிப்பாக வீட்டுக்கான லோன்களை!
கேள்விகள் இல்லை என்றவுடன் மக்கள் வீடுகளின் மதிப்பைக் கூட்டி லோன்கள் பெற்றனர்
அதாவது ஒர் ப்ராபர்டியின் அசல் மதிப்பு ஒரு லட்சம் என்றால் ஒன்றரை லட்சம் மதிப்பாகக் காட்டப்பட்டது
சொத்தின் மதிப்பில் எழுபது சதவீதம் லோன் கிடைக்கும்
இங்கே ஒரு லட்சம் மதிப்புள்ள ப்ராபர்டிக்குக் கடன் எழுபதாயிரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்
ஒன்றரை லட்சம் என மதிப்புக் காட்டியதால் கடன் ஒரு லட்சத்துக்கு மேல் வழங்கப்பட்டது (1.05 Lacs)
கடன் வாங்கியவர்களில் பெரும்பாலோருக்கு நிரந்தர வருமானமில்லை 😛
வங்கிகளின் போக்கில் விட்டிருந்தால் இப்படிப்பட்ட கேஸ்களுக்குக் கடனே கிடைத்திருக்காது 😡
அவர்களைத்தான் கண்ணை மூடிக் கொள்ளச் சொல்லியாயிற்றே
அமெரிக்கா என்னும் சூப்பர் பவர்
பாகம் 4
உலகப் பொருளாதார வீழ்ச்சி 2007-08
வங்கிகள் சொத்துக்களை ஏலத்துக்குக் கொட்டு வந்த போது இதே போல ஏராளமானவை மார்க்கெட்டில் ஏலத்துக்கு வந்திருந்தன
Glut எனப்படுகிற நிலை, இதாவது டிமாண்டை விட சப்ளை அதிகம்
வாங்குவாரில்லை
எனவே விலைகள் பாதாளத்தைத் தொட்டன
ஏற்கெனவே கூறிய உதாரணத்தின் படி ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துகளை நாற்பதாயிரத்துக்குக் கூட வாங்க ஆளில்லைஆனால் அவற்றின் மீது கொடுக்கப்பட்ட கடன் ஒரு லட்சத்துக்கும் மேல்
வங்கிகள் பார்த்தன
எல்லா லோன்களையும் பண்டில் பண்ணி மெச்சூரிடி வேல்யூ வைத்து (ஒரு லட்சத்துக்கு!) ஆப்ஷன்களாக மார்க்கெட்டில் விற்று விட்டனர்
அல்லது அவை மீது லோன்கள் கொடுக்கப்பட்டன 😅
அவர்கள் அளவில் ரிஸ்க் குறைவு
அவற்றை வாங்கியது உலகத்திலுள்ள பல வங்கிகள்!
இவையெல்லாம் மெச்சூரிடி தேதியை எட்டிய போது வாங்கிய விலைக்கும் மார்க்கெட் விலைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்
ஆப்ஷன்களை வாங்கியவர்கள் மற்றும் அதன் மீது லோன் கொடுத்தவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்
பல பேர் திவால்
லெ மேன் ப்ரதர்ஸ் வீழ்ச்சி இப்படி நிகழ்ந்ததுதான்
உலகத்தின் வங்கிகளைச் சுழற்றி அடித்தது இது
க்ளோபல் மெல்ட் டவுன் எனும் உலகம் தழுவிய ரிசஷனுக்குக் காரணமாயிற்று
ஆனாலும் அமெரிக்கா பாடம் கற்கவில்லை
உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவோ வேலை வாய்ப்புகளைக் கூட்டவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை
தவிர அமெரிக்கர்களை வேலைக்கு வைப்பது பகரும் செலவு
அவர்களின் ஆட்டிட்யூட் அப்படி
பெரும் சம்பளம், வாரம் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, ஐந்து மணியென்றால் ஐந்து மணிக்கு சீட்டை விட்டு எழுந்து விடுவர்
அதற்கு மேல் உட்காரச் சொன்னால் ஊதியம் கூடும்
இவை இந்தியர்களிடம் இல்லை முதலாளிகளின் டார்லிங் இந்தியர்கள்
இந்த இடம் மாறாததால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கூடவே இல்லை
மற்றொரு விஷயமும் உண்டு
இந்தியர்கள் பெற்றோர் செலவில் படிக்கிறார்கள், மாஸ்டர்ஸ் வரை.
ஆனால் யூஜி எனும் க்ராஜுவேஷன் எட்டவே ஒரு அமெரிக்கனுக்கு முப்பது வயதுக்கு மேலாகிவிடும்
மாஸ்டர்ஸ் பண்ண நாற்பதாகிவிடும்
இந்தியர்கள் இருபத்தைந்து வயதில் மாஸ்டர்ஸ் படித்து விடுகிறார்கள்
நாற்பது வயதில் இந்தியர்கள் பெரும் க்வாலிஃபிகேஷனோடு பதினைந்து வருட அனுபவமும் உள்ளவராக இருக்கிறார்கள்
இதன் காரணம் நமது சமுதாய அமைப்பு என் பிள்ளைகளின் படிப்பு எனது கனமை எனும் இந்தியப் பெற்றோர்களின் மனப்பான்மை
இந்தியர்கள் கோலோச்ச இது ஒரு முக்யமான காரணம்
அமெரிக்கா மேட்டருக்கு வருவோம்
உள்நாட்டு உற்பத்தி இல்லை எல்லாம் இறக்குமதிதான் எனும்போது விலைவாசி ஏறும்
இதைச் சமாளிக்க கரன்சி அடிக்கப்பட்டது
இது பணவீக்கத்தைக் கூட்டியது
சாதாரணமாக அரசின் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்புக்குத்தான் கரன்சி அச்சடிக்க வேண்டும்
அதையெல்லாம் புறக்கணித்து கரன்சியை அச்சடித்துத் தள்ளியது அமெரிக்கா
பணவீக்கம் அதிகரித்தது
ஆயினும் டாலரின் சர்வதேச மதிப்பு குறையவில்லை
ஏன்?
- தொடரும்
அமெரிக்கா என்னும் சூப்பர் பவர்
பாகம் 5
அமெரிக்க டாலரின் ஆதிக்கமும் தற்போதைய நிலையும்
அமெரிக்காவின் பொருளாதார பலத்திற்கு ஒரு காரணம் உண்டு
மிகப் பெரிய நிலப்பரப்பு
நில வளம் நீர்வளம்
பெருமளவில் விவசாய உற்பத்தி உணவு உற்பத்தி
மிகக் குறைவான மக்கள் தொகை
இயற்கை வளம் கனிம வளம் எல்லாமே அபரிமிதம்
எந்த நாட்டில் நிலப்பரப்பு அதிகமாகவும் மக்கள் தொகை குறைவாகவும் உள்ளதோ அங்கு அதன் வளங்கள் மீதான அழுத்தம் குறைவு
தவிர அமெரிக்காவின் தொழில் உற்பத்தி உலகப் போரின் போது மிக அதிகம்
பிசினஸ்மேன்களின் பேராசையால் பின்னாளில் நிகழ்ந்ததே சீனாவிற்கு உற்பத்தியை மாற்றியது
இது நடப்பதற்கு முன் அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாகத்தான் இருந்தது
சர்வதேச சந்தையில் தங்கத்தின் நிலையில்லாத தன்மை காரணமாக அதற்கு மாற்றாக ஒரு காமன் மீடியம் தேவைப்பட்டது
அப்படி தங்கத்து மாற்றாக உலக நாடுகள் ஒரு காமன் கரன்சியாக சர்வதேச சந்தையில் டாலரை ஏற்றன
இதற்கிடையில் வளைகுடா நாடுகளில் ஆயில் எடுத்து சுத்திகரிக்கும் வேலை தொடங்கியது வளைகுடா நாடுகளிடம் அதற்கான டெக்னாலஜி மற்றும் ஆள்பலம் இல்லாததால் அமெரிக்கா அதைச் செய்தது அந்நாடுகளின் பொருளாதாரமே எண்ணெயை நம்பி இருந்ததால் அந்நாடுகள் அமெரிக்காவை நம்பி இருந்தன எண்ணெயை டாலரில் விற்றன
டாலரின் பொற்காலம் இங்கே ஆரம்பித்தது
உலகநாடுகள் எண்ணெய்க்கு வளைகுடாவை நம்பி இருந்ததால் அதை வாங்க டாலர் தேவைப்பட்டது
உலகில் எந்த மூலையில் யார் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினாலும் அவர்கள் டாலருக்கு டிமாண்டை உருவாக்குகிறார்கள், இன்று வரை.
இதைத்தான் பெட்ரோ டாலர் என்கின்றனர்
ஆயிலுக்கு டிமாண்ட் உள்ள வரை டாலர் டிமாண்ட் இருக்கும்
டிமாண்ட் உள்ள எந்தப் பொருளும் விலை உயரும்தானே
டாலர் பறப்பது இதனால்தான்
ஆயிலை டாலர் தவிர வேறு எந்தக் கரன்சியிலும் விற்காதவாறு அமெரிக்கா பார்த்துக் கொண்டது
சதாம் முயன்றார்
கடாஃபி முயன்றார்
ஈரான் முயன்றது
பின் நடந்தது வரலாறு 😅
சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா கடன் பட்டுள்ளது ஆயிலுக்காக
சீனாவிடமும் கடன் பட்டுள்ளது இறக்குமதிக்காக
அந்தக் கடன் பல ட்ரில்லியன் டாலர்கள்
(ஒரு மில்லியன் பத்து லட்சம்; ஒரு பில்லியன் நூறு கோடி; ஒரு டிரில்லியன் ஒரு லட்சம் கோடி)
அந்நாடுகள் டாலரின் சரிந்து வரும் உள்நாட்டு மதிப்பைத் தாமதமாகவே உணர்ந்தன
அவர்களுக்கு வர வேண்டிய டாலர்களின் மதிப்பு வேகமாகக் குறைவதை உணர்ந்து கொதித்துப் போயுள்ளன
சவூதி அரேபியா வேறு கரன்சியில் ஆயில் விற்க வழி தேடுகிறது
இதற்கிடையே ஈரான் ரஷ்யா இவை வேறு கரன்சிகளில் ஆயிலை விற்கின்றன
டாலரின் பெட்ரோல் ஆதிக்கம் முடிவுக்கு வர ஆரம்பித்துள்ளது
அதன் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டது
உள்நாட்டில் அதன் வரம்பு மீறிய கரன்சி அச்சடிப்பாலும் அதன் விளைவான பணவீக்கத்தாலும் டாலருக்கு மதிப்பே இல்லை என்ற நிலையில் ஆயில் எனும் தூணும் தகர்ந்தால் டாலர் தரைமட்டமாகி விடும்
இதுதான் டாலரின் இன்றைய நிலை
இதைச் சமாளிக்க டாலர் டிபாசிட்டுகளின் மீதான வட்டியை ஏகத்துக்கு ஏற்றி டாலருக்கு ஒரு செயற்கை டிமாண்டை உருவாக்கியது அமெரிக்கா
அதற்கேற்ற வகையில் இந்தியாவும் ரூபாய் டெபாசிட்டுக்கான வட்டியை ஏற்றியது இன்று நாம் காணும் வட்டி விகித உயர்வுக்குக் காரணம் இதுவே
ஆனால் சராசரியாக சர்வதேச வட்டி விகிதம்
3.5 % ஐத் தாண்டாது
எனவே இது மிகவும் தற்காலிகமானது
கத்தி மேல் தான் நடப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது
எனவே உக்ரைனைத் தூண்டி விட்டு அந்தப் போரில் குளிர் காய்கிறது
டாலர் வீழ்வது நிச்சயம்
சரி
இந்தியா இதை எப்படி எதிர் கொள்கிறது
-தொடரும்
சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாக லோன்கள் கொடுக்கப்பட்டன
வருமானமில்லாததால் அவர்களால் கடனைத் திருப்பிக்கட்ட இயலவில்லை
வங்கிகள் சொத்துக்களை ஜப்தி பண்ணி ஏலத்திற்குக் கொண்டு வந்தன
அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது
- தொடரும்
அமெரிக்கா என்னும் சூப்பர் பவர்
பாகம் 6
அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி மற்றும் பாரதத்தின் பீடுநடை
இந்தியாவைப் பற்றி எழுதும் முன் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி பற்றிப் பார்ப்போம்
ஒரு எண்ணெய் வியாபாரி எண்ணெநை வாங்கி விற்கிறான்
தானிய வியாபாரி தானியத்தை
வங்கிகள்?
பணத்தை
ஆம் வங்கிகள் பணத்தை வாங்குகின்றன, டெபாசிட்டாக
பணத்தை விற்கின்றன முதலீடாக அல்லது லோன்களாக
பணம் தொடர்ந்து மதிப்பிழந்து பகொண்டே வந்தால் (டாலர் போல)
என்னாகும்
வாங்கும்போது இருந்த மதிப்பு விற்கும்போது இல்லை
எனவே நஷ்டம்
சுருங்கச் சொன்னால் இதுதான் நிலைமை அமெரிக்காவில்
விரிவாகப் பார்ப்போம்
தொழில் சரிவு மற்றும் தனிநபர் வருமானம் வீழ்ச்சி என ஏற்கெனவே பார்த்தோம்
வங்கிகளின் லாபம் என்ன
அது டிபாசிட்டுக்குக் கொடுக்கும் வட்டிக்கும் அது லோன்களுக்கு வாங்கும் வட்டிக்குமுள்ள வித்யாசமே
லோனே திரும்பி வரவில்லையெனில் என்னாகும்
முதலுக்கே மோசம்
தவிர அதன் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிட்டாவிடில்?
வருமானம் இல்லாவிட்டால் வங்கிகளால் அதன் நிர்வாகத்தையே நடத்த இயலாது பணமிருக்காதுஇன்று அமெரிக்காவில் இதுதான் நடக்கிறது
லோன்கள் திரும்ப வருவதில்லை முதலீடுகளிலிருந்து சரியான வருமானமில்லை
கடன் கொடுத்த பல கம்பெனிகள் கவிழ்ந்து விட்டன
வங்கி திவாலாகாமல் என்ற செய்யும்
தவிர வதந்தி என்ற அபாயமும் உண்டு
வங்கிகள் நிலைக்க மக்களின் நம்பிக்கையே அடிப்படை
ஒரே சமயத்தில் டெபாசிட்டர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டால் எல்லா வங்கியும் அம்பேல்தான்
அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி தவறான பொருளாதாரக்
கொள்கையின் விளைவு
பேராசையின் விளைவு
இப்போது வட்டியை அதிகரித்த செயல் புத்திசாலித்தனமில்லை
வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு அதிகம் வட்டி கொடுக்க வேண்டி வரும்
கடனின் மீதான வட்டியும் அதிகரிக்கும்
இதற்கு முன்னிருந்த குறைந்த வட்டியே வசூலாகாத போது அதிக வட்டிக்கு எப்படி லோன் தருவது
எனவே வங்கிகளின் நஷ்டம் கூடும்
பல வங்கிகளின் வீழ்ச்சிக்கு இது அடிகோலும்
இனி பாரதம் இதை எப்படி எதிர் கொள்கிறது என்று பார்ப்போம்
அதன் வரலாறு 2016 ல் தொடங்கியது
அதிகம் கரன்சி அடித்தல் ஆபத்து எனப் பார்த்தோம்
நமது கரன்சியை மற்றொருவன் அச்சடித்துப் புழக்கத்தில் விட்டால்?
பாகிஸ்தான் இதைத்தான் செய்தது
நமது கரன்சியை அச்சடித்து வெளிநாடுகளில் டாலராகவும் யூரோ ஆகவும் மாற்றியது
நமது கரன்சியின் மதிப்பு சரிந்தது
அதை நிறுத்தினோம் முதலில்
பிறகு மேக் இன் இண்டியா தொடங்கியது
நமக்கு வேண்டியதை வெளியில் வாங்கினால்தானே டாலர் அவசியம்
நாமே தயாரித்தால்?
ஆயுதங்கள் ஏவுகணைகள் இவற்றை நாமே தயாரிக்க ஆரம்பித்தோம்
ஏற்றுமதியும் செய்கிறோம்
உதாரணமாக கரோனா மருந்தை நம்மிடம் விற்க மேலை நாடுகள் முன்வந்த போது நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதில், செய்ததில், பத்தாயிரம் கோடிக்கு மேல் அந்நியச் செலாவணி மிச்சம்
பல நாடுகளுக்கு இலவசமாக மருந்தை அனுப்பியதில் அவர்களின் நட்பும் கிட்டியது
உலக அரங்கில் பாரதத்தின் கௌரவமும் உயர்ந்தது
அமெரிக்க வட்டி விளையாட்டில் பாரதமும் உயர்த்தினாலும் அதிகம் உயர்த்தாமல் "தனக்கு வேண்டிய அளவு" உயருமாறுபார்த்துக் கொண்டது
அதென்ன வேண்டிய அளவு
கொஞ்சமாக டாலர் உயர்ந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் அதுதான்
இறக்குமதி?
நமது இறக்குமதியின் பெரும்பான்மை ஆயிலே
அதை மிகக் குறைந்த விலைக்கு ரஷ்யாவிடம் வாங்குகிறோம் ரூபாயில்
இதை முதலில் எதிர்த்த
சவூதி அரேபியா பெரிய பஸ்டமரான இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் நானும் குறைந்த ரேட்டுக்கே ரூபாயில் தருகிறேன் என்கிறது
ஆம் டாலரில் அல்ல ரூபாயில்
இதனால் ரூபாயின் மதிப்பு வீழாமல் இருக்கும்
ஓரளவுக்கு மற்ற இறக்குமதிகளில் நஷ்டமே
ஆனாலும் மொத்தத்தில் லாபமே
இதெல்லாவற்றையும் விட ஒரு பெரிய அட்வான்டேஜ் பாரதத்துக்கு உண்டு
வரப்போகும் மாதங்களில் பெரிய டிப்ரஷன் உலகத்தில் வரப்போகிறது
அமெரிக்கா உள்படப் பல நாடுகள் பாதிக்கப்படும்
பாரதம் அந்த லிஸ்டில் இல்லை
பாரதத்தின் 6 ட்ரில்லியன் டாலர் ஜிடிபி நிறைவேறும்
எனவே பாரதம் பீடு நடை போடும்
உலகம் பாரதத்தின் நட்பை வேண்டி நிற்கும்
ஜெய்ஹிந்த்!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home