Sunday, March 5, 2023

 

நீரறுத்த தீவினிலே பள்ளி கொண்ட பெருமானே

பேரறுத்துப் பற்றறுத்த ஞானியர்தம் வினையினையே

வேரறுத்து உய்விக்கும் நாரணனே மாயவனே

ஆரறுப்பார் எம் பிறப்பை உன்னையன்றிக் காண்கிலனே


Happy anniversary Sheel!


36 years just went in a flash!


If time travel was possible we could have gone to the same date 36 years back.


The day our dream came true. Cloud 9.

Happy. Blissful.


A small tribute to the person who has filled my life with joy; who has been a friend; a mother; an ideal wife.


சஞ்சலங்கள் தீர்ந்ததடி நெஞ்சில்

கொஞ்சியே நீ சம்மதித்த போழ்தில்

பஞ்செனவே பறந்ததடி மனமே

நஞ்சு கூட அமுதானது தினமே

என்னுள்ளே என்னை நான் தேடி

உன்னுள்ளே இனம் கண்டு கொண்டேன்

இறைதேடல் என்பதன் தொடக்கம்

குறைவிலா அன்பினுள்ளடக்கம்

வீணையடி நானுனது கையில் - முன்

காணாத கானங்கள் இசைத்தாய்

என் வாழ்வையே பண்ணாக்கிய கலையே

உன்னைப் பிரிதல் என்பதொன்றிலையே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home