கண்டு வந்த மாதரிங்கே கோடி கோடி உண்டு
கொண்டு வந்து சேர்த்ததடி காலம் உனை இங்கே
கண்டுவந்து காதல் கொண்டு நானிழந்தேன் என்னை
மொண்டு கொட்டி காதலினால் நிறைத்தாயடி வாழ்வை
சண்டமாருதம் வந்து நம்மை அலைக்கழித்த போதும்
தண்டிறங்கு பகைப் படையாய் துன்பம் வந்த போதும்
பண்டுரைத்த கண்ணனவன் கீதை மொழி தன்னை
மீண்டுரைத்து அறிவுறுத்தி என்னைக் கரை சேர்த்தாய்
மீண்டு மீண்டும் பாட்டெழுதி உனைப் பாடினாலும்
கொண்டதொரு நன்றியது தீராதடி என்னில்
ஈண்டிங்கே வாழ்வுதனில் நிறைவு தந்த கண்ணன்
யாண்டும் நாம் சேர்ந்திருக்க வரமருள்வானாக


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home