பாடும் நிலா பாலு
நிலவைப் பாடிய நிலவே - ஆயிரம்
நிலவென்று தொடங்கிய உன் பயணம்
நிலைக்கும் என்றே மயங்கி இருந்தோம்
நிலமெனும் நல்லாள் இழந்தாள் இன்று
நில்லாமல் நல்லிசை வழங்கிய மகவை
நிலையிலை வாழ்வென எமக்குக் காட்டி
நினைத்தால் இனிக்கும் இசையை வழங்கிய
நிலத்தின் செல்வ! நிலைப்பாய் என்றும்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home