Saturday, August 1, 2020

அறச்  சீற்றம்

 

வாய்மை உரைக்கத் தயங்கி யதில்லை

பொய்மை கடியப்  பயந்ததும் இல்லை

எதிரில் உள்ளோர் எத்தனை பேர்கள்

எண்ணிக்கை கண்டு  தளர்ந்ததும் இல்லை

சிறுமை கண்டு சீறியதுண்டு

அற்பர்கள் முன்பு  தோற்றதும் உண்டு

சிந்தையும் செயலும் அறம்  சார்ந்திருப்பின்

நிந்தைகள் நம்மைத் தொடாது நிச்சயம்

தர்மம் தன்னைப் பற்றியே வாழ்ந்தால்

தோல்விகள் கண்டு துவளாதிருப்போம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home