ஜல்லிக்கட்டு ஒரு சிறிய விஷயம் என்றும் அதற்கு இவ்வளவு போராட்டம் அவசியமில்லை என்றும் சில குரல்கள் எழுந்தன. ஜல்லிக்கட்டு ஒரு என்பது ஒரு வாசல் திறந்தது போல்தான். கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததும் உச்ச நீதி மன்ற உத்தரவை மீறியதும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மட்டுமின்றி கர்நாடகாவிற்குத் துணை நின்றதும் விவசாயிகள் தொடர்ந்து மரணித்து வருவதும் இப்படிப் பல விஷயங்கள் பொங்கிக்கொண்டே இருந்தன.
இது மட்டுமல்ல. 2015 டிசம்பரில் வெள்ளம் வந்த போதே இளைஞர்கள் அரசை நம்பிப் பயனில்லை என்று களத்தில் இறங்கி விட்டனர். உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு அது. . அது ஒரு எழுச்சியின் ஆரம்பம். எங்களுக்குக் கை கொடுக்க உங்களால் இயலாவிடின் நாங்களே எங்களைப் பார்த்துக் கொள்வோம் என்ற எச்சரிக்கைதான் டிசம்பர் 2015 ல் இளைஞர்களின் களமிறங்கல். அரசு அப்போதே விழிப்படைந்திருக்க வேண்டும்.
அதே செய்தி இன்னும் துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது மெரினாவில், அரசியல்வாதிகளைப் புறக்கணித்ததன் மூலமாக.
இந்த இளைஞர்கள் எனக்குப் பெரும் நம்பிக்கை தருகிறார்கள்.அன்று அந்த இருட்டில் ஒளிர்ந்த கை பேசி விளக்குகளின் மத்தியில் ஒரு ஆதவன் உண்டு ; எங்களுக்கு விடியல் நம்பிக்கை தந்த ஒளி. இந்நாடு பொன்னாடாகும். இது சத்தியம்.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home