எம் ஜி ஆரின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி இப்பதிவு.
என்றும் நான் அவரது தீவிர ரசிகன். இதைச் சொல்ல நான் என்றும் தயங்கியதில்லை. ஆனால் அவரது அரசியலை விமரிசித்திருக்கிறேன். ஒரு நல்ல அரசியல் தலைவர் என்பதை விட ஒரு மிகச் சிறந்த மனிதராக அவர் வாழ்ந்தார். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சான்றிதழ்களுள் மிகப் பெரியதும் சிறந்ததும் அவரது விமர்சகர்களிடமிருந்து பெறும் பாராட்டே .
மறைந்த திரு சோ அவர்கள் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சித்தவர். அவரை ஒரு அரசியல் கோமாளி என்றும் தமிழகத்தின் அரசியல் விபத்து என்றும் கூறி வந்தவர். எம் ஜி ஆர் மறைந்த போது சோ அவர்கள் எழுதிய தலையங்கத்தில் ஒரு பகுதி இது.
"எம் ஜி ஆர் பற்றி அவர் விளம்பரத்துக்காகக் கொடுத்தார் டாக்ஸுக்காகக் கொடுத்தார் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். இந்தக் காரணங்களுக்காகக் கூட நம்மில் எத்தனை பேர் தானம் செய்கிறோம்? தவிர விளம்பரமே இல்லாமல் எம் ஜி ஆர் செய்த உதவிகள் அனந்தம்.
"அடுப்பில் உலை ஏற்றி விட்டு அதில் அரிசி போடலாம் என்ற நம்பிக்கையோடு யாரிடமாவது போகலாம் என்றால் அது எம் ஜி ஆர்தான்" என்று திரை உலகில் பலர் பேசிக் கேட்டிருக்கிறேன் . இப்படிப்பட்ட சர்டிபிகேட் நம்மி,ல் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் ?
தன்னை மட்டுமே நம்பி எம் ஜி ஆர் சாதித்த வெற்றிகளை சமீபத்திய தமிழக சரித்திரத்தில் யாருமே சாதித்ததில்லை."


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home