Tuesday, June 19, 2018

வசைச் சொல்லை உரமாக்கி வாழ்வினிலே உயர்ந்திட்டாய் 
கசையடிகள் பல பெற்றும் வெறுப்பின்றி   அன்பு செய்தாய் 
திசையறியா  மனிதர்க்கு வழிகாட்டும் பெருவிளக்கே 
இசை படவே இன்னும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 

மாறனால் வந்த எழுச்சி அலை பேசி உரையாடல்   
அம்மாவால் வந்த மலர்ச்சி ஏழையின் பசியாறல்  
இரண்டையும் மறுப்பதற்கில்லை ஆயினும் 
என் இதயம் ஏழையின் பக்கம் 
இது கட்சி சார்பல்ல மனித  நேயம் 
அலைபேசுபவர்களைக் காட்டிலும் 
நிலைத்த  பசியுள்ளோர் அதிகமிங்கே 
ஏழைக்கு எட்டும் தொலைவில் 
உணவை வைப்பதே அரசின் கடமை 
பட்டினிச் சாவுகளைப் 
பட்டினால் போர்த்தாதீர் ; 
அடிப்படைக் கடமையை அழகாய்ச்  செய்தவர்க்கு 
அளிக்கலாம் இன்னுமோர் வாய்ப்பு 
அதே நேரம் அரசிற்கோர் அறிவுரை 
ஏழையை ஏழையாகவே வைக்காதீர் 
ஏனெனில் வளர்ச்சிதான் உயிர்மையின்  அறிகுறி 
தேக்கம் அடுத்த 
தேர்தலுக்கு உதவாது  

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home