Tuesday, June 5, 2018

அருணன் உதயம் ஆவது கதிரவன் வருகைக்குக் கட்டியங் கூறல்
அருணாசலா நின் வரவு கடற்கரை உலாவிற்கு மேட்டிமை நல்குதல்
ஓய்வு நீ பெற்றது அலுவலில் மட்டுமே; தொண்டுகள் தொடர்க உன்னதமாகவே
ஆய்ந்து   கற்ற கல்வியும் பெற்றதோர் அறிவும் பாங்காய்ச் சொல்கிறாய் அவனியோர் நலமுற
மற்றவர் எல்லாம் அறுபது கடந்தால் வம்புகள் பேசுவர் வழக்குரைப்பர்
கொற்றவன் நீ மாநிலம் பயனுற பாரதிப் பாதையில் பீடுடன் நடக்கிறாய்
வான் முட்டும் புகழோடு குன்றாத இளமையும் பிணியிலா உடலும்
வான்மீகர்க்கு மருந்தீந்த ஈசன்  எந்தை உவந்து அருள்கவே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home