Tuesday, June 19, 2018

பாரினிலே பாங்கான தலைவர்தம் கதையுரைத்தீர் 
காரிருள் சூழ் கார்ப்பொரேட்டின்  உண்மை சொன்னேன்  
உலகம் உய்ய வந்த பெருமக்கள் குறித்தல்ல 
நலமாய் வாழ வழி தேடும் பணி மக்கள் துன்பமிது 
நாடியே நலம்  உரைத்தால் கொள்வோர் இங்கில்லை 
ஓடிச் சென்று நடை பாவாடை விரிப்பவர்க்கே காலமிது 
நம் பணியை நாம் செய்தோம் என்றளவே  அமைதி வரும் 
உம்மளவில் அனுபவம் என்? உரைத்திட நன்றாகும் 



உள்ளம் உரைப்பதை உதடுகள் உரைக்குமாயின்
உள்ள படியே உமக்கு உற்றார் யாருமிலர் 
பாங்காய் லாபம் பலமுறை  கணக்கிட்டு
ஆங்கே வாழ்வியலை வணிகவியலாக்கும்
அயிரை இட்டு வரால் வாங்கும் மனிதர்கள்
பயிரை மேய்ந்து வயிறு வளர்க்கும் வேலிகள்
இவர்களிடையே உண்மை விற்றால் கொள்வாரில்லை
தவறே ஆயினும் கூறுதற்கு  மௌனமே சிறந்த மொழி
கசக்கின்ற உண்மை இங்கு விலை போவதில்லை 
பசப்புகிற மாந்தர்க்கே இங்கு அரசவை  அங்கீகாரம்
தேன்  போன்ற பொய் விரும்பும் மூடர் தம் நடுவே
ஏன் என்ற கேள்விகள் எடுபடுவதில்லை
உம் முன்னே கடந்து செல்லும் காட்சியைக் கண்ட படி
சும்மா இருப்பீர்; தண்ணீரில் தாமரையாய் 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home