Tuesday, June 19, 2018

இன்று ஒருவர் நம் திண்ணையில் எம் ஜியார் போல் மற்ற நடிகர்கள் சாதிக்க முடியுமா என்று கேட்டிருந்தார். அங்கே பதிலளிக்க சந்தர்ப்பப்படவில்லை. எனவே இங்கே அளிக்கிறேன்.
அதற்கு முன் ஒரு வார்த்தை.  எம்ஜியார் என்ற அரசியல்வாதியை நான் என்றும் விமரிசித்தே இருக்கிறேன். ஆனால் எம்ஜியார் என்ற மனிதரை நான் ஆராதிக்கிறேன்.

எம்ஜியாருக்கு இருந்தது பக்தர் கூட்டம். அது மட்டுமில்லை. அவர் திரையில் என்ன செய்தாரோ 
அதில் பலவற்றை நிஜ வாழ்விலும் செய்தார். ஆகவே திரை பிம்பம் அவர் நிஜ பிம்பமாய் ஆயிற்று. கிட்டத்தட்ட அவர் தெய்வமாய்ப் போற்றப் படுகிறார். தென் மாவட்டங்களில் அவர் இறந்ததை நம்பாதவர்  உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

2015ல் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். மன்னாதி மன்னன் என்பது அந்நிகழ்ச்சியில் பெயர். பொங்கல் ஸ்பெஷல்.  இன்னும் எம்ஜியார் பெயர் சொன்னால் அழுகிறவர் உண்டென்று அந்நிகழ்ச்சி நிரூபித்தது.பெற்ற  தந்தைக்கே  கண்ணீர் சிந்தாத இக்காலத்தில் மரித்து 25 வருடங்கட்கு மேல் ஆன ஒருவருக்காக மக்கள்  அழுவது வியப்பு.  எப்படி மக்கள் நெஞ்சங்களில் எம்ஜியார் இடம் பிடித்துள்ளார் என்பதற்கு     அந்நிகழ்ச்சி   ஒரு சான்று .

திரைத்துறை என்ற ஒற்றுமை தவிர இன்று அரசியலில் உள்ள பல  நடிகர்கட்கு  எம்ஜியாரோடு ஒப்பிட ஒன்றுமில்லை. அவர் பெற்ற வெற்றியை மற்ற நடிகர் எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home