பாலுண்டு புற்றதிலே பள்ளி கொண்ட மாயனவன்
சால்புமிகு முத்தழகன் அமைத்ததோர் ஆலயத்தில்
சாலக் கேணி நீரை நெய்யாக்கி விளக்கெரித்தான்
நாலினும் எட்டவொண்ணாக் கோவிலூர்க் கோமகனே
ஆவினங்கள் பால் சொரியப் புற்றினுள்ளே தானுறைந்தான்
கோவிலூராய்ப் பெயர் விளங்கும் முத்தழகன் திருநாட்டில்
சாலக் கிணற்று நீரை நெய்யாக்கி விளக்கெரித்த
மாலவனை நாராயணா என்றுரைக்க ஒளிர்வாரே
இரண்டிலாப் பொருளாம் இருடீகேசன் மாலவனை
இரண்டாகிய தேவியர்தம் கோவிலூர்க் கோமகனை
இரண்டில்லா மனதோடு தமிழெடுத்துச் செய்த பாக்கள்
இரண்டற்று ஊர் கலந்து மனமகிழ்ந்து ஏற்றிடுமே
அழுக்கினைக் கொண்ட மனது அல்லாடிச் சுகங்கள் தேடி
முழுமை என்ற ஒன்றைக் காணாமல் கொண்ட உறவால்
பழுதின்றிப் பெற்ற செல்வம் ; உறவினும் ஊரினும் அஞ்சி
இழுக்கென்றே களைந்த தாயால் இன்னுமோர் கர்ணன் இங்கே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home