நாளை உந்தன் விடியல் உண்டு
அதற்கு எந்தன் பாடல் உண்டு
வாழ்க்கை என்பதோர் வளைந்த பாதையில்
ஆழ்ந்து கிடக்குமோர் ஞானப் புதையல்
வெறுப்பு என்கிற ஆயுதம் கொண்டு
வெறி பிடித்தலையும் மூடர் உண்டு
எதிரே விரியும் திருப்பங்களிடையே
உண்மையைப் போன்ற பொய்கள் உண்டு
மடமையில் மூடிய மாந்தர் கண்ணுக்கு
மறை பொருள் ஞானம் மறைந்தே இருக்கும்
மனிதரைப் பிரிக்கும் வேற்றுமை என்னும்
மகத்தான மதிலைக் கடந்து மேலேறின்
ஞாலம் அளிக்கும் அழகிய காட்சி
காலத்தை வென்ற இறையின் மாட்சி
பேதம் களைந்த பார்வை இருந்தால்
வேதம் இதுவே பெரும்புகழ் உமதே
நாளை உந்தன் விடியல் உண்டு
அதற்கு எந்தன் பாடல் உண்டு


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home