Wednesday, June 6, 2018

                          சீரடி குருவே சரணம்

1.   பூண்டதோர் வெள்ளை ஆடை ; அமர்ந்ததோர் துருக்கர் மேடை
ஆண்டதோ அகிலம் கோடி ஆயினும் நீயோர் துறவி
மாண்டதெம் வினையும் பயனும் ; விளித்தபோதெம்மைக் காத்து
ஆண்டதுன் கருணை  எங்கள் சீரடி குருவே சரணம்

2.     நின்  தோற்றம் ஆரும் அறியார் தோன்றாதது மறைவதில்லை
குன்றெனக் குவியும்  துயரும் திருவடி நினைந்தால் மறையும்
மன்றிலே புகழும் கூடும் மனதிலே அமைதி சேரும்
மன்னுயிர் உய்யவோர் ஒளியாம் சீரடி குருவே சரணம்

3.   பாலகனாயோர் பதினாறில் நற்றவம்  புரிந்து  நின்றாய் 
கால வெள்ளத்திலாங்கே சற்றே மறைந்து நின்றாய்
சாலச் சிறந்ததோர் பத்தரோடு திருமணம் நிகழ்த்த   வந்தாய்
ஞாலத்து மணி விளக்கே எங்கள் சீரடி குருவே சரணம்

4.   உலையினின்றோர் குழவி காத்தாய் உற்ற பத்தர் உளமுரைத்தாய்
விலைபகர் வணிகர் செருக்கை நீர்விளக்கால் விலக்கி  வைத்தாய்
தலை சிறந்த வாழ்வும் முடிவும் முற்றுணர்ந்த பத்தர்க்களித்தாய்
நிலைப்பாய் அன்பர் நெஞ்சில் சீரடி குருவே சரணம்

5.     அத்துவைத  நெறிதன்னை  வாழ்வாலே  விளக்கிட்டாய் 
முத்தியதன் பொருளதனை உலகுக்கு உணர்த்திட்டாய் 
பத்தியுமோர் முள் பாதை குழிகள் பல நிறைந்ததுவாம் 
சித்திக்கும் எப்பொருளும் சீரடியைச் சரணடைந்தால் 

6.  சரணமாய் நின் பாதம்  அடைந்தோர்க்கு ஒருநாளும் 
மரணமில்லை கிட்டிடுமே  நித்தியமாய்ப் பெருவாழ்வு 
நரனாகிய எனக்குள்ளே நாரணனாய் நின்றிடுவாய் 
பரம்பொருளே சீரடிவாழ் மும்மூர்த்தி  நீதானே 

7.     நிலந்தீ நீர் வளி வெளியென்ற வைந்தும்
மூலமாம் நிந்தன் விளியிற் பணியும் 
கலங்காது சிந்தையில் கொண்டோர் பெறுவர்
நலமே சீரடி குருவே சரணம் 

8.    வேதியனுக் கோர் குரு வானாய் 
வேதப் பொருள் தனை யுரைத்தாய் 
ஆதி யிடை அந்த மில்லா 
சோதி சீரடி குருவே சரணம் 

9.     தாயினும் சாலப் பரிந்தே உலகியல் வாழ்வில் அருள்வாய்
நோயினில் படுத்தோர் தம்மை சடுதியில் நலம் பெறச் செய்வாய்
நோயிதாம் பிறப்பு தன்னை வெல்லவே நின்  அருள் வேண்டும்
சாயி தேவனாம் எங்கள் சீரடி குருவே சரணம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home