ஆர்த்து வரும் வெள்ளம் போல் அடங்காத உள்ளமிது இல்லாமற் போக வேண்டும்
மூர்க்கமிலா என்னுள்ளே முதிராத கன்னிகை நீ கனிவோடு வந்தமர வேணடும்
அது மடியக் கடலோடு கடல் கலக்கும்; வெளியிலே கரைந்திட அருள்வாய் தாயே
மதுவினும் களிவளர் தமிழ் தந்த கோதையே வில்லிபுத்தூர் விட்டு சித்தன் மகளே
நலமான கல்வியோடு நாமகள் அருள் பெற்று வாழ்க
அலகிலா செல்வத்தோடு வறியவர்க்கு ஈந்து வாழ்க
வானும் மதியும் உள்ளவரை உன் புகழ் நிலைத்து வாழ்க
தேனைப் போல் வாழ்வினிக்க நல்லதோர் மனையாள் வாய்க்க
பேர் சொல்லும் பிள்ளைச் செல்வம் குறையின்றிக் கொண்டு வாழ்க
பார் போற்றும் பதவிகள் தானே உன்னைத் தேடி வருக
நித்திலமாம் நாரணன் நம்பியவன் பேரருளால்
நித்தியமாய் நோயின்றி நீ நூறாண்டு வாழ்க

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home