Monday, February 12, 2018

புத்தாண்டில்

பாரினில் பாங்காய் அமைதி நிலவிட
காரிருள் வறுமை அகன்று ஒளி பெற
ஆவினம் பெருகி நீர் நிலை உயர
வேளாளர் சுமைகள் நீங்கி நலம் பெற
கேளாமல் மாதம் மும்மாரி பெய்திட
பாரதம் என்னுமோர் பொன் திரு நாட்டில்
பாங்கான தலைமை நின்று நிலைத்திட
பாவையைக் கிடத்தியே நாடகம் நடத்திய
பாதகர் இனியும் இல்லாதொழிந்திட
ஊடகம் என்றும் உண்மையே உரைத்திட
மூடர்கள் அரசியல் துறந்தே ஓடிட
அறம் வென்றிட மறம் தோற்றிட
திறம் கொண்ட தலைவர் தொடர்ந்து ஆண்டிட
நல்லாட்சி மலர்ந்து மக்கள் மகிழ்ந்திட
வில்லாண்ட வேத நாயகன் அருள்கவே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home