கோவிலூர்க்
கோமகன்
1. கொற்றவரும்
கொண்டாடும் வடவரைபோல் தனியில்லை
புற்றரவிர்ப் போந்தாங்கே பெருமானாய் எழுந்தருளி
இருதேவியுமாய் 'அபயம் ' எனக்கரம்
காட்டும்
அருட்கடலாம் கோவிலூர்க் கோமகன் காண்மினே
2. மணமில்லை கொண்டாடக் குழவியில்லை சற்றும்
பணமில்லை துயருக்கோர் முடிவில்லை
என்பார்
அரவிற் துயின்று அரவினோடுகந்த கோவிலூர்க்
கோமகன்
பரமனைக் கண்டோர்க்கில்லை துயர்
3. மண்தின்று மண்ணுலகம்தன் வாயிற்காட்டிய பெருமான்
3. மண்தின்று மண்ணுலகம்தன் வாயிற்காட்டிய பெருமான்
விண்ணளந்து மாவலியை மண்ணுக்கனுப்பிய
அறவோன்
மண்ணில் மறைந்துபின் அருவாய்த் தோன்றிய
மாதவன்
எண்ணிலாப் பெருமைக் கோவிலூர்க்
கோமகனை என்னென்பேன்
4. ஆதிசேடன் தனை ஆழியில் தவிக்க விட்டு
ஆளவந்தான் எமை திருமகளோடொரு மகளுமாய்
'ஆளில்லை எமக்கு அமுது படைக்க' வென்றழைத்து -எமை
ஆட்கொண்டகோவிலூர்க் கோமகனை என்
சொல்வேன்
5. நரையொடு மூப்பும்
கூடி வந்ததோர் வேளையிலே
'திரைகடலோடித் திரவியம் தேடு' எனப் பணித்தே
முறை தவிர்த்து சடுதியில் என் குறை களைந்த
மறையறியாக் கோவிலூர்க் கோமகனை என்னென்பேன்
6. அலைமகளும்
பூமகளும் இருபுறம்மேவ குமிண் நகைத்
தலைமகன் தாள் பணிந்தம் யாம்; ஏழுதிருமாளிகைக்
குலம் வாழி
பாண்டிய நாட்டில் ஈந்து அறம் புரக்க அருள்கவே
அடியார்க்கு
வேண்டிய வண்ணம் தரும் கோவிலூர்க்
கோமகன்
7.
தந்தோம் தனமுனக்கு; பேர்சொல்லும் சிறுமகளையீந்தோம்;
நந்தா விளக்கெனப் புகழ் மணக்கும் மகனுமுண்டு; மகற்குமகவும்;
'செந்தமிழில் எமைப்பாடெ'னப் பணித்த
கோவிலூர்க் கோமகனே
தந்தனம் யாம் இருவினையும் உனக்கு; ஏலாய்
8. பாழியந்தோளுடைப்
பத்மநாப ! நின் நாவினால்
ஏழுதிருமாளிகைத் தோன்றலை தாத என்றழைத்தனை
மடுவிலோர் நாகம் வென்ற கோவிலூர்க்
கோமகனே
கெடுக எம் இரு வினையும் நின்தாள்
பணிதலால்
9. வடவேங்கடம்
சென்று வழிபட இயலார்க்குச் செப்பியதோர்
இடமாம் தென்திருமலை இதுகாண் ; இருமங்கையர்
கோன்
தடக்கையன் திண் தோள் கோவிலூர்க்
கோமகன் தாள்
கிடந்தால் வினையறும் ; மக்காள்; ஐயமில்லை
10. முத்திவழி என்றும் அறவோர்க்குச் செப்பியதாம்; மூர்க்கமிலா
பத்தி வழியுண்டாம் பாமரர்க்கே; பாண்டிய நாட்டு
நித்திலமாம் கோவிலூர்க் கோமகன் பாதம்
பணிமின்
சத்தியம் இது ; பிறவி நோய்
விடும்
11. சார்ங்கமென்னும்
வில்லுண்டு அம்புண்டு காண்
ஆர்த்தெழுந்து வரும் அசுரரைச் செற்றவே
நேர்வழி நிற்கும் பத்தர் தம் புரவலன் எம்
கார்முகில் வண்ணன் கோவிலூர்க் கோமகன்
ஆர்த்தெழுந்து வரும் அசுரரைச் செற்றவே
நேர்வழி நிற்கும் பத்தர் தம் புரவலன் எம்
கார்முகில் வண்ணன் கோவிலூர்க் கோமகன்
12. அறவழி நிற்பின் அச்சம் விடுக மற்றவை
புறந்தள்ளி எம் கோவிந்தனைப் பணிக தன்
திறம் கொண்டு தென்னிலங்கைச் செற்றானை தென்னாட்டு
மறவர் கோன் கோவிலூர்க் கோமகனைச் சொல்
புறந்தள்ளி எம் கோவிந்தனைப் பணிக தன்
திறம் கொண்டு தென்னிலங்கைச் செற்றானை தென்னாட்டு
மறவர் கோன் கோவிலூர்க் கோமகனைச் சொல்
13. மரமும்
கல்லும் நின் கால் பட நன்றாகும்
பரமாதர் கவர்ந்தானும் நின் அம்பினால் நன்றாகும்
சிரம் உன் பாதம் வைத்தோம் அபயம் என்னும்
கரம் கொண்டு அருள்வாய் கோவிலூர்க் கோமகனே
பரமாதர் கவர்ந்தானும் நின் அம்பினால் நன்றாகும்
சிரம் உன் பாதம் வைத்தோம் அபயம் என்னும்
கரம் கொண்டு அருள்வாய் கோவிலூர்க் கோமகனே
14. வில்லிபுத்தூர் விட்டு சித்தன்
நவின்ற பல்லாண்டும்
நல்லதோர் நாச்சியார் இயம்பிய திருப்பாவையும்
அல்ல காண் அடியேன் பிதற்றிய இம்மொழி
அல்லவையாயினும் ஆட்கொள்வாய் கோவிலூர்க் கோமகனே
நல்லதோர் நாச்சியார் இயம்பிய திருப்பாவையும்
அல்ல காண் அடியேன் பிதற்றிய இம்மொழி
அல்லவையாயினும் ஆட்கொள்வாய் கோவிலூர்க் கோமகனே
15. பெற்றோம்
யாம் பண்டு முன்செய்த நல் வினையான்
குற்றமொன்றில்லாத கோவிந்தனை பல்லாண்டு
பாடப்
பெற்ற பரமேட்டியை நாரணன் கோவிலூர்க்
கோமகனை
உற்றதால் பெறுவம் யாம் பிறப்பில்லாப் பெருவாழ்வு
16. சீற்றமிகு
சிங்கமாகி இரணியன் செல்வனைப் புரக்கக்
கற்றூண் பிளந்து வந்தாய்; எங்கள் வாழ்வு
ஏற்றம் கொள்ளப்
புற்று மீதூறிப் போந்த பெருமான் கோவிலூர்க்
கோமகனே
போற்றுவோம் உன்னையாம் பலகாலும் ஏத்தியே
17. கடலெழு அலைகள்
கடலிலே விழுதல் போல் - பல
உடலெடுத்தாலும் உயிர் கலப்பதுன்னிலே; பொய்
உடலொரு உடையே; உயிராவது
நீயே; மாயைக்
கடல் கடக்க அருள்வாய் கோவிலூர்க்
கோமகனே
18. ஈட்டிய பொருளும்
பல் சேவகரும் நிலமும் வீடும்
ஈங்கு பயனில்லை காண் ; வாராது கடைவழிக்கே
ஈந்து விடும் மக்காள் உய்ய வழி ஒன்றே
எங்கள்
ஈசன் கோவிலூர்க் கோமகன் பாதம்
19. நாகம் வென்றாங்கோர்
ஆயர்குலம் புரந்தாய்
நாகம் வென்றன்றம்மாமன் கஞ்சனைச் செற்றாய்
நாகம் துயின்றாங்காழியில் அலைமகளோ டுகந்தாய்
நாகந்தன் புற்றிற் போந்த கோவிலூர்க் கோமகனே
நாகம் வென்றன்றம்மாமன் கஞ்சனைச் செற்றாய்
நாகம் துயின்றாங்காழியில் அலைமகளோ டுகந்தாய்
நாகந்தன் புற்றிற் போந்த கோவிலூர்க் கோமகனே
20. காகந்தனைச்
சினந்தான் நிலமகள் செல்விக்காய்
மோகமுற்ற இராக்கதர்கோன்
தங்கை சொல்லால்
வேகமுறு கரதூடணர் பொருத கோவிலூர்க் கோமகன்
இகந்தனை இனிதாக்கிப் பரந்தனை
அருள்கவே
21.
நோற்றே
பல் பிறவி யாம் செய்த தவத்தானும்
எமைப்
பெற்ற பெருமக்கள் தம் நன்வளர்ப்பானும் உவந்து
கற்ற நூல்வளத்தானும் உற்றேன்
கோவிலூர்க் கோமகனை
எற்றைக்கும் மறவா மனமருள்க
நாரணனே
22.
சகடம்
உதைந்தே அரக்கனை அழித்து, இலங்கை இளவல்
'புகல்' என்ற
போழ்தில் இருகரம் நீட்டி; அறத்தான் நிற்றலில்
அகமகிழ் அருட் கரத்தோன்
கோவிலூர்க் கோமகனன்றிப்
புகல் ஏது மக்காள் இரு வினை
துறக்க வரின்
23.
வறுமைக்கோர்
வறுமையை வைப்பவன் நாரணன்
மறுமைக்காய்ச் செப்பிய வழியவன்
மலரடி
உறுதியாய் உய்ப்பான் கோவிலூர்க்
கோமகன்
பெறுவீர் பணிந்தே மீண்டும்
பிறவாமை
24.
பாலாழியின்
மகள் வடிவாய் வலத்திருத்தி; தடக்கைப்
பாலாழி கொண்டிவ்வுலகம் புரத்தி
; கடைந்த
பாலாழியின் நஞ்சுண்டன்தனைப்
புரத்தி;
பாலாழியில் துயில் கோவிலூர்க்
கோமகனே
25.
தருவது என்றன் இருவினை யுனக்கே
வருவது அதனால் நின் திருவடி தனக்கே
கருமமும் நீத்தலும் உள்ளிய மறுமையைத்
தருவது கோவிலூர்க் கோமகன் நீயே
வருவது அதனால் நின் திருவடி தனக்கே
கருமமும் நீத்தலும் உள்ளிய மறுமையைத்
தருவது கோவிலூர்க் கோமகன் நீயே
26.
காதல் கொண்டு சூடித் தந்த
கோதை எனும் பூங்கொடி
மாதவா நின் வாய்ச் சுவையை அறிய நாடி நின்றனள்
காதலாகிக் கனிந்து நீயும் கோதை தனைக் கொண்டனை
தாத! என்னே உன்னருள் கோவிலூர்க் கோமகனே
மாதவா நின் வாய்ச் சுவையை அறிய நாடி நின்றனள்
காதலாகிக் கனிந்து நீயும் கோதை தனைக் கொண்டனை
தாத! என்னே உன்னருள் கோவிலூர்க் கோமகனே
27
ஆதியாகி அந்தமாகி அண்டமெல்லாம்
ஓருருவாய்
சோதியாகி நின்றவனே பெருமானே உன்நாவால்
நீதி சொல்லி அருச்சுனனைப் போரிடவும் வைத்ததொரு
நாதியும் நீயன்றோ கோவிலூர்க் கோமகனே
சோதியாகி நின்றவனே பெருமானே உன்நாவால்
நீதி சொல்லி அருச்சுனனைப் போரிடவும் வைத்ததொரு
நாதியும் நீயன்றோ கோவிலூர்க் கோமகனே
28
அரியுருவாய் அந்திப் போழ்தில் அரக்கனை அழித்தனவன்
கரியரசன் தனைக் காக்கக் கையாழி ஏவியவன்
மரிப்பதோர் மாற்றமே என்றுரைத்த நாயகன்தான்
சிரிப்பதனைச் சிந்துமிந்த கோவிலூர்க் கோமகனே
கரியரசன் தனைக் காக்கக் கையாழி ஏவியவன்
மரிப்பதோர் மாற்றமே என்றுரைத்த நாயகன்தான்
சிரிப்பதனைச் சிந்துமிந்த கோவிலூர்க் கோமகனே
29
பஞ்சவர்தம் குடில் ஏகி 'ஓர்பருக்கை' எனக்கேட்டுத்
தஞ்சமெனெ விளித்த தங்கை குறை தீர்த்த மாயனவன்
கஞ்சனைச் சாய்த்தே தன் தாய்தந்தை சிறை மீட்டான்
நெஞ்சே நீ மறவாதே நம் கோவிலூர்க் கோமகனை
தஞ்சமெனெ விளித்த தங்கை குறை தீர்த்த மாயனவன்
கஞ்சனைச் சாய்த்தே தன் தாய்தந்தை சிறை மீட்டான்
நெஞ்சே நீ மறவாதே நம் கோவிலூர்க் கோமகனை
30
ஆர்க்கும் கண்டுணரவொண்ணாப் பொருளாம்
சீர்மிகு தவத்தானும் எட்டவியலாத் தத்துவனாம்
கூர்த்த நகம்கொண்டு இரணியனை வதைத்தவனாம்
நேர்சொல்லவியலா எம் கோவிலூர்க் கோமகன்
சீர்மிகு தவத்தானும் எட்டவியலாத் தத்துவனாம்
கூர்த்த நகம்கொண்டு இரணியனை வதைத்தவனாம்
நேர்சொல்லவியலா எம் கோவிலூர்க் கோமகன்
31
சிற்றஞ்சிறு காலை எழுந்து
மார்கழி நீராடி
உற்ற உறவாலே உளமுருகி மெய் தளரப்
பற்று மீதூறிக் கோதை சொன்ன முப்பத்து
நற்றமிழும் நீதானே கோவிலூர்க் கோமகனே
உற்ற உறவாலே உளமுருகி மெய் தளரப்
பற்று மீதூறிக் கோதை சொன்ன முப்பத்து
நற்றமிழும் நீதானே கோவிலூர்க் கோமகனே
32
கடல் முன்னின்று 'வழிதருக' எனப் பணியாக்
கடல் பின் நின்னம்பினால் நயந்து முன்னின்று
'கடலுக்கோர் நியதியுண்டு, பாலம் செய்க' என வேண்ட
கடலுக்கோர் பாலமிட்ட கோவிலூர்க் கோமகனே
கடல் பின் நின்னம்பினால் நயந்து முன்னின்று
'கடலுக்கோர் நியதியுண்டு, பாலம் செய்க' என வேண்ட
கடலுக்கோர் பாலமிட்ட கோவிலூர்க் கோமகனே
33
தீராக்கலி தொலைக்க வந்துற்றனம்
எம் நிதியைச்
சேராத மாக்களுக்கு எடுத்துரைத்து
உய்விக்க நாங்கள்
கோராததும் தருவாய் கோவிலூர்க்
கோமகனே சேர்ப்பாய்
நேராக எம்மை நின் பிராட்டியுறு
பாற்கடல்
34
கூற்றுவனையஞ்சேல் மாமதியம்
போல் முகத்தான் நாரணன் தன்னைப்
போற்றுவீரேல்; மலைஎறியினும் விடம் கொடினும்
இரணியன் மகனை
கூற்றுவன் அண்டாது காத்த திருமகள்வாழ்மார்பன் உலகளந்த
பெருமான்
நேற்றும் இன்றும் நாளையும் இல்லாக் கோவிலூர்க் கோமகன்
35
அரக்கி முலையுண்டோர் விளையாட்டாய்
அழித்தனை
அருந்தவத்துப் பார்த்தனுக்கோர் பாடம் உரைத்தனை
அணுவுக்குள்
அணுவாகி மூவுலகிற் பொருளாகி
அனைத்தும் நீயானாய் கோவிலூர்க் கோமகனே
36
தானவர் அவுணரிராக்கதர் இச்சகத்தெங்கு
மில்லை
தானென்ற அகமும் தன்னலமும் மிக்க பேரவாவுமே
நானென்ற சொல் விடுத்துப் பணிகவே பாண்டியர்
கோன் கோவிலூர்க் கோமகனை ;கெடும் கெடுதி.
37
செருக்களத்தில் வாழும் கலை
உரைத்தாய்; வானவர்கோன்
செருக்கடக்கிச் செழுமலை தூக்கி நின்றாய்; புவிவாழ்வின்
கருப்பொருளே ! கோவிலூர்க் கோமகனே ! இரந்தோம்
தருவாய் எமக்கே இனிப் பிறப்பில்லாப் பெருவாழ்வே
38
ஐந்திலொன்று பெற்றவளைப்
பெறவே நீ வில் வளைத்தி
ஐந்திலொன்று பெற்றவன் நின்னைத்தன் தோளிருத்தி
ஐந்திலொன்றாம் வானவர் கோன் மகனுக்கு அறிவுறுத்தி ; என்
ஐந்தும் ஆட்கொள்வாய் கோவிலூர்க் கோமகனே
39
ஒன்றேதான் இரண்டாகி மூன்றினோடு நான்குமாய்
மன்னுமைந்தும் ஆறுமே உன்அங்கமாகி நிற்கவே
ஏழிலும் பரந்திருக்கும் எட்டாகிய நாதனே
! எம்மை
ஊழ் களைந்து ஏற்றெடுப்பாய் கோவிலூர்க் கோமகனே
40
நான்குக்கும் இரண்டுக்கும்
அப்புறத்து நாயகன்
நான் என்ற அகமொழிப்பின் காட்சி தரும் சேயவன்
தனக்குவமை இல்லாத கோவிலூர்க் கோமகனே
எனக்குள்ளே எழுந்தருளி இம்மை ஒழித்துத் தா
41
பவளம் போல் செவ்வாயும் கமலம்
போல் மலர் முகமும்
பணைத்த இருதோளும் தடக்கையிற் சங்குமாழியும்
திருமகளும் நிலமகளும் இருபுறமும் இணை நிற்க
தருவாயே கேட்ட வரம் கோவிலூர்க் கோமகனே
42
சிறை பிறந்து ஓரிரவில் ஆயர்
குலம் சென்றேகி
குறை களைந்து யசோதைதன் பெருமகனாய் வளர்ந்திருந்த
மறை போற்றும் மாசில்லாக் கோவிலூர்க் கோமகனே
பறை தருவாய் எமக்கே நீ பணிந்தோம் யாம் உன் தாளே
43
ஒருமையில் வந்தோம் ஒருமையில்
செல்வோம்
கருமுகில் வண்ணன் வேய்ங்குழலோசை
அருகில் கேட்கும் ஐயம் வேண்டாம்
அடுப்பீர் கோவிலூர்க் கோமகன்
பாதம்
44
உண்பதும் உடுப்பதும் உறங்குவதும்
அல்லாது
விண்டுரைக்க எற்றுணை நன்மையுண்டோ
நம்மிடம்
கண்டு முக்குணமில்லாக் கோவிலூர்க்
கோமகனின்
தண்நிழலடி சேர்வீர் பெறுவீர்
நலம்
45
நான்மறையறிவாரும் அறியா
அந்தணனை தந்தைக்காய்க்
கான்சென்ற அறவோர்தம் சிந்தையானை
முனிவர்க்காய்
ஊன்தின்னும் அரக்கியை வதைத்த
கோவிலூர்க் கோமகனைத்
தான் நெஞ்சத்திருத்தியவர்
நிலைப்பர் நாரணன் தாள்
46
தேடிச் சோறு தின்றே ஊன்
வளர்க்கும் மனிதர்காள்
நாடி நலம் பெற தேவர்கோன்
பாதம் நயந்து
கோடி கொடுத்தும் எம் கோவிலூர்க்
கோமகனைப்
பாடிப் பறை கொள்வீர் உய்யும்
வழியறிவீரே
47.
வானுயர்ந்து மாவலி சிரம்
திருவடி வைத்து
தானுவந்து தந்தை சொல்லால்
மகுடம் துறந்து
மீனாகி மறை காத்த கோவிலூர்க்
கோமகனை
தேனான தமிழால் யான் ஏத்திப்
பாடுவனே
ஞாலமதில் ஐந்துமாகி வேறுபட்ட
பூச்சியனை
இரண்டுமின்றி மூன்றிலாத
கோவிலூர்க் கோமகனை
இரந்திரந்து வேண்டுவனே பிறவிப்
பிணியறுக்கவே
49.
ஒன்றெனச் சொன்ன விசிட்டாத் துவைதமும்
'அன்று இரண்டென'க் கொண்ட துவைதமும்
மூன்றினுக்கப்புறமாம் கோவிலூர்க் கோமகனை
நன்றாய் உரைத்த உயர் நான்கினோடு ஒக்குமே
50.
ஐந்தினொடு ஆறையும் அங்கமாய்க் கொண்டவன்
அந்தணர் எழுவர்க்கும் காணுதற் கரியவன் .
நன்மையது நாடிடின் உரைத்திடும் எட்டினை
ஒன்பதும் பணிகின்ற கோவிலூர்க் கோமகனை
51.
ஒன்பதாய ஓட்டையுள்ள மெய்யிதாம் நம் வீ ட்டிலே
நன்கதாய எட்டெழுத்தை ஏழும் கொண்டு பாடுவீர்
ஆறும் ஐந்தும் நான்குமில்லா கோவிலூர்க் கோமகனை
பேறு பெற்று மூன்றிரண்டு
கடந்தொன்றில் கலக்கவே
52.
நான்கும் ஓதி ஐந்தை வென்று வாழுகின்ற மறையவர்
சான்றோர் செப்பும் எட்டெழுத்தில் ஒன்றேயான நாயகன்
தான் பரவிய ஏழிலும் இரண்டிலாத சத்தியாம்
நான் என்றும் தாள் பணிகிற கோவிலூரின் கோமகன்
சான்றோர் செப்பும் எட்டெழுத்தில் ஒன்றேயான நாயகன்
தான் பரவிய ஏழிலும் இரண்டிலாத சத்தியாம்
நான் என்றும் தாள் பணிகிற கோவிலூரின் கோமகன்
53.
முரசு கொட்டி வெற்றியோடு சீதை கொண்டு செல்கையில்
பரசுராமன் தன்னை வென்று இமயமலைக் கனுப்பிய
அரசு ராமன் தானுமான கோவிலூரின் கோமகன்
கரமுயர்த்தி நிற்கிறான் வந்து தாள் பணிமினே
54.
பச்சையான வண்ணம்
கொண்ட
கண்ணனை
எம்
தூயனை
நச்சியவன் தாள்
நினைந்து உளம்
கனிந்து போற்றுவீர்
இச்சை
கொண்டு
துதித்தவர்க்கு கோவிலூரின் கோமகன்
இச்சகத்து மட்டுமின்றி மறுமையிலும் அருளுவான்
55.
மாலவன் தன் நாமமன்றி வேறொன்றும் இயம்பிடாத
சீலத்திற் சிறந்த பத்தன் இரணியன் தன் புதல்வனுக்காய்
ஞாலத்துப் புத்திரனாம் நம் கோவிலூரின் கோமகன்
காலத்துத் தோன்றினான் தூண் பிளந்தோர் சிங்கமாய்
56.
சிங்கமாய்த் தோன்றிய மால் சீலமிகு அந்தணனாய்
மங்காப் புகழ் மாவலியை மூவடியான் ஆட்கொண்டான்
தங்காத்திரு தங்க வைக்கும் கோவிலூரின் கோமகனை
நீங்காது அடுப்போர்க்குண்டு நல் இகத்தோடு பரமே
57.
பரமே என்று போற்றி
நின்ற பத்தருக்கோர் பாலையிலே
சிரமேற் கொண்டன்பினாலே அமுதத்தை அளித்த வள்ளல்
பரகாலன் தனையாண்ட கோவிலூரின் எம் கோமகன்
கரமுண்டு நமைக் காக்கக்
கமலத் தாள் கிடப்பீரே
58.
கிடந்ததோர் திருக்கோலம் அரங்கமும் அனந்தமும்
தடமுலைப் பிராட்டியைத் தவிர்த்ததோர் திருமலையும்
தடக்கையால் 'அபயம்' என்னும் கோவிலூர்க் கோமகனும்
விடங்கொண்ட அரவிற் துயிலும் வைகுந்த மாலவனே
59.
கொன்றை மாலை கொண்டவனாம் ஓரிரண்டு கண்ணனைச்
சென்று காத்த வார் முலையாள் மோகினியும் ஆயினை
ஒன்றழித்து அழிக்குமொன்றைக் காத்த விந்தையானவன்
நன்றுமின்றித் தீதுமற்ற கோவிலூரின் கோமகன்
60.
பறவையே ஊர்தியான ஆதியான மாயனே
பறவையின் பகைவனே பாயுமான விந்தையே
கறவைகட்குக் கானமிசைக் கோவிலூர்க் கோமகனே
மறந்திடாது உன்னைப் பாடி ஏத்த
நீயும் அருள்கவே
61.
மீனுமாகி மறை காத்தாய் பாலாழி தனைக் கடைந்த
வானுயர் மலை காத்தாய்
இரணியாக்கனைக் கொன்றே
தானுமாய் இப்புவி காத்தாய்; ஒப்பில்லா மாமணியே பெருமாளே
நானுமுளேன் ஆட்கொள்வாய் கோவிலூரின் கோமகனே
62.
வந்தாங்கோர்
சிங்கமாய் இரணியற்கு நற்கதியாம்
அந்தணனாய் வந்துற்றோர் மாவலிக்குத்
திருவடியாம்
நந்தா விளக்கே எம் கோவிலூரின்
கோமகனே
வெந்தீயாம் எங்கள்தம் பிறவிப்
பிணி தீர்ப்பாய்
63.
திறலழியச்
செற்று மன்னர்தம் முடி கொய்த முனிவன் மகனும்
அறவழிக்கோர் இலக்கணமாய்
இலங்கி இலங்கை வென்றானும்
பாங்காய் அந்த உரோகிணிக்கு
மகனாய்ப் பிறந்தானும்
பாண்டிய மறவர் கோன் கோவிலூர்க்
கோமகனே
64.
உதித்ததோர்
ஆய்க்குலத்து; வேய்ங்குழல் ஊதிக் களித்தி
துதித்ததோர் அருச்சுனன் தனக்கு அழகாய் உரைத்தி
மதியும் வானும் உள்ளவரை
நிலைக்குமோர் திருமறை
கதியிலேம் ; காப்பாய்; எம்
கோவிலூரின் கோமகனே
65.
அறம் புரந்து அல்லாரைக் கருவறுக்கத்
திறம் கொண்டு சினமுற்ற கல்கியாய்
பிறப்புற்று ஓர் முறை வரவேண்டும்
யாண்டும்
சிறப்புற்ற கோவிலூரின் எம்
கோமகனே
66.
உண்டென்று
சொல்வார் உளம் நிறைந்து நிற்பான்
'உளனிலன்' என்பாரை ஒறுப்பதும் இல்லை;
'உளன் இலன்' எனுமிந்த இரண்டினும்
இடையே
உணர்வாகி நிற்கும் எம் கோவிலூர்க்
கோமகன்
67.
ஆதியிலோர்
ஆலிலை கிடந்துலகம் படைத்தனை
ஆநிரையை மேய்த்தனை; புவனம்
உன்னில் காட்டினை
ஆதி இடை அந்தமற்ற கோவிலூர்க்
கோமகனே
ஆவினமாய் வந்தோம் யாம்;
எங்களுக்கோர் நாதி நீயே
68. சூடிக்
கொடுத்த சுடர்க்கொடியாம் கோதை நினை
நாடிக் காதலாகி மெய் சோர
வளை கழலப்
பாடிப் பிச்சியாகிப் போந்தனள்
நின் மார்புக்கே - உனைத்
தேடியே யாம் வந்தோம் கோவிலூர்க்
கோமகனே
69.
பொன்
மானை நீ தொடரப் பெண் மானை அவன் கவர
குன்றரசன் துணை கொண்டு அவுணர்
படை வென்றாய்
நன்றறிந்தும் அறியாதது போல் நிற்கும் நின் மாயை
நின்னால் கடக்க வேணும் கோவிலூர்க்
கோமகனே
70.
மண்ணும்
மலையும் கடலும் விண்ணும்
கண்ணில் தெரிபவை எல்லாம் நீர் கொள்ள
நுண்ணிய வடிவாய் ஆலிலைத்
துயின்ற
புண்ணியன் எங்கள் கோவிலூர்க்
கோமகன்
71. அமரர் அன்றஞ்சியோட
இந்திரன் விதிர்த்து நிற்க
அனைத்துலகை வென்றவோர் அவுணன் அந்தணனை
அலகிலா வீரம் மெச்சி 'இன்று போய்
நாளை வா' என்ற
அகிலமோர் ஏழும் ஆளும் கோவிலூர்க்
கோமகன் காண்
72. அவுணன் தன் இளவல் அடைக்கலமாய்
வந்த போழ்தில்
அவனையும் உடன்பிறப் பென்றதோர் அமுதனாம்
அன்பிற்குமுயர் நட்பிற்கும் இலங்குமோர் விளக்கமாம்
அறம் புரந்தல்லவை யகற்றும் கோவிலூர்க்
கோமகன்
73. நலன்களாய பண்புகள் ஒன்றுமே பெற்றிலேன்
பலன் கருதாத் தொண்டுகள் ஏதுமே செய்திலேன்
நலம் விளைக்கும் நாயகன் கோவிலூர்க்
கோமகன்
தலம் தொழுது பற்றுவீர் மறுமை உய்க்கும் சேவடி
74. ஆதியிலே ஆழியிலே
இலைதனிலே இருந்தவன்
ஊதியதோர் சங்கமதால் பாரதப்போர் முடித்தவன்
நீதிதனைக் காத்திடவே தன் மாயை கொண்டு பிறப்பவன்
நாதி இவனே என்றடைவீர் கோவிலூரின் கோமகனை
75. ஐந்தினால்
உருவாகி ஐந்து கொண்டைந்தும் துய்ப்பீர்
ஐந்திலே ஒன்றிலாததை உய்த்துணர்ந்து நன்கு ஓதி
ஐந்திலே இரண்டிலாத ஐந்திலே மூன்றிலாதவை இலா
ஐந்தும் மூன்றும் கொண்ட கோவிலூர்க் கோமகனைச் சேர்
76. மூன்றதனைக்
கொண்டவரை கடல் கடவீர்
மூன்றதிலே இரண்டான மூவா மாயவனை
மூன்றுமே தானாகி ஒன்றாய் நின்றவனை
மூன்றும் அளந்த கோவிலூர்க் கோமகனைச் சேர்
77. இரவிலே இருளிலே
சிறையிலே உதித்த சேய்
இரவி நீங்கி மதியானவன் பத்திலே நின்றதாய்
அரவினோடு யமுனை தாண்டி கோகுலம் சென்றவன்
அரவினாய புற்றிற் போந்த கோவிலூர்க்
கோமகன்
78. ஏழ் பிறப்போ எப்பிறப்போ செய்த தீமை அறிகிலேன்
ஊழ் வினைதான் இப்பிறப்பு என்று மட்டும் உணர்ந்துளேன்
சூழ்வினைகள் எது வரினும் காத்தருள வேணுமே
தாழ்தலில்லாச் செங்கோலுடைக் கோவிலூர்க் கோமகனே
ஊழ் வினைதான் இப்பிறப்பு என்று மட்டும் உணர்ந்துளேன்
சூழ்வினைகள் எது வரினும் காத்தருள வேணுமே
தாழ்தலில்லாச் செங்கோலுடைக் கோவிலூர்க் கோமகனே
79. ஒன்றிரண்டு புரமெரித்த செஞ்சடையன் தானுமே
இரண்டு மூன்று கடந்து நிற்கும் உன்னையேத்த வல்லனே
மூன்று நான்கு உலகிலும் உனக்கிணை யாருளர்
நான்கு ஐந்தும் ஆளுகின்ற கோவிலூர்க் கோமகனே
இரண்டு மூன்று கடந்து நிற்கும் உன்னையேத்த வல்லனே
மூன்று நான்கு உலகிலும் உனக்கிணை யாருளர்
நான்கு ஐந்தும் ஆளுகின்ற கோவிலூர்க் கோமகனே
80. ஐந்தெழுத்து
அப்பனும் ஆறு தலைப் பிள்ளையும்
ஐயமில்லை உன்னையுற்றார் ; ஏழிலும்
எட்டாத
ஒன்பதாய மூர்த்தியாம் கோவிலூர்க்
கோமகன்
தன்னை யுற்ற பத்தருக்கு இல்லை என்பதில்லையே
81. பத்தாய பிறவிதனை எடுத்திலன் இனி அறங்காக்க
பண்டைய ஒன்பதின் தொடர்ச்சியாய் தன் சொல் காக்க
கற்றுணர்ந்தோர்க்கும் எட்டாத கோவிலூர்க் கோமகன்
பற்றறுக்க வேண்டியே மலரடியைப் பணிந்திடீர்
82. எண்ணினார்க்கும்
நண்ணினார்க்கும் எட்டாத மாயனவன்
பண்டையயேழ் அந்தணரும் காண வொண்ணாக்
கருப்பொருளாம்
நுண்ணியதாய் ஆறைந்தில் உள்ளேயும் வெளியிலுமாய்
புண்ணியனாய் உறைகின்ற கோவிலூர்க்
கோமகனே
83. நாலு திசை
பரவு தமிழ் செப்புகின்ற தென்னாட்டில்
கோலுமது கோணாத மூன்றிலோர் திருநாட்டில்
பாலுமதாம் ஆழி புகு
இரண்டிலாத ஒன்றதாம்
நூலுமது போற்றுகின்ற கோவிலூரின் கோமகனே
84. நாவைக் கொண்டு
நற்றமிழ் நவில வந்த கட்டளை
பாவையும் அல்ல யான்; பட்டனும் அல்ல
காண்
சேவை புரி ஆழ்வாருடை அடிப் பொடியும்
அல்லவே
தேவை உன் திருவருளே கோவிலூர்க் கோமகனே
85. சங்கம் கொண்டு
தமிழ் வளர்த்த பாண்டியர் தம் நாட்டினில்
சங்கினோடு ஆழியும் கொண்டருளுகின்ற
மாதவன்
நங்கையர் இருபுறம் கொண்ட கோவிலூரின் கோமகன்
மங்காப் புகழ் இகம் வேண்டின் பணிகவே இம்மலரடி
86. கொண்டதாம்
முக்கண்ணில் ஒன்று தீச் சுடராம்
உண்டதோர் விடமாம்; எரித்தது முப்புரமாயினும்
தந்ததோர் வரத்தால் நயந்து அவுணன்
தீ அஞ்சி
வந்தவர்க்கோர் அபயம் தந்த கோவிலூர்க்
கோமகன்
87. உற்ற நண்பன்
உண்டதால் உறுத்து வந்த வறுமை
முற்றுங் களைய ஈந்த
செல்வம் இயக்கன் குபேரன்
பற்ற வந்தபோழ்தில் ‘யாம் காப்பம்’
என்ற பெருமான்
பற்று நீக்கி மறுமை உய்ப்பான் கோவிலூரின்
கோமகன்
88. பண்டோர் சபரிக்குக்
கனியுண்டு கதி கொடுத்தாய்
மீண்டோர் சிறு பணிக்கு அவை நடுவே
ஆடை தந்தாய்
உண்டு காண் எங்களிடம் பேரளவாய் இருவினைகள்
கொண்டே வரமளிப்பாய் கோவிலூர்க் கோமகனே
89. ஆங்கோர் பறவைக்கு
ஈமக்கடன் ஈந்தாய்
பாங்காய் கொண்டனை குரங்கும் அவுணரும்
கங்கை நிடாதர் கோனுமே நின் உடன்பிறப்பாய்
தீங்கிலா உள்ளமே என் கோவிலூர்க் கோமகனே
90. அரசு துறந்தே
தந்தை சொல் பேணக் கானகம் ஏகினை
அரசு தந்தனை ஆங்கோர் இளவலுக்கு வாலியை
வதைத்தே
அரியணை ஈந்தனை வீடணன் தனக்கு அரக்கனையழித்தே
அரிதோ நினக்கு ஈதலும் துறத்தலும் கோவிலூர்க் கோமகனே
91. மரமுதைத்துக்
உருமாற்றிக் கல்லுதைத்துப் பெண்ணாக்கி
சிரமுதைத்து மாவலிக்கு மீளாப் பெரும்பதவி
- என்
வினையுதைத்து என்னைக் கடைத்தேற்றுவ
தெப்போது
உனை விட்டால் கதியில்லை கோவிலூர்க்
கோமகனே
92. மரமோர் ஏழும்
ஒரு சரம் கொண்டே துளைத்த வீரன்
அரவிலே கிடந்துறங்கி மறுமையும்
தரும் வள்ளல்
நரனுக்கோர் நாரணனாய் வாழ்வுதனின்
தேரோட்டி
பரம்பொருளாய் எங்கும் நிறை கோவிலூர்க்
கோமகன்
93. மறைகட்கும்
மறையவர்க்கும் மறைந்ததோர் மூர்த்தி - அமரர்
குறை களையக் குழவியாய் ஆங்கு அயோத்தியில் வந்தே
பிறைசூடன் மலையெடுத்த இராக்கதனைச்
செற்றியவன்
நிறைபொருளாய் நிற்கின்றான் கோவிலூரின் கோமகனாய்
94. கொண்ட நாடு
விடினும் கானகம் சென்று படினும்
கண்ட 'முனிவரைக் காப்பது நம் அறம்'
என்று
தண்டக வனம் தன்னில் கர தூடணர் வதைத்து
அண்டங்கள் அனைத்தும் ஆளும் கோவிலூர்க்
கோமகன்
95. பரிதி தனை மறைத்துப்
பகல்தனை யிரவாக்கி
கரிதனைக் கொல்வித்து அந்தணன் மகனென்று
பரிவான தருமனைப் பொய்யுரைக்கப் பண்ணிய
அரியே இவன் காண் நம் கோவிலூர்க் கோமகன்
96. எண்ணிக்கை
வெல்லும் என்றே இறுமாந்த கௌரவர் தம்மின்
எண்ணம் தனைப் பொய்யாக்கி அறந்தான்
வென்றதம்மா
மண்ணகம் வாயில்காட்டி வண்ணமாய்ப்
போரை வென்ற
கண்ணன் மற்றாருமில்லை கோவிலூர்க்
கோமகன்தானே
97. கோகுலப் பாவையரோடு
பாங்காய் நீ கண்ட களிகள்
தகுந்ததோர் சொல்லால் விளக்க இன்னும்
இங்காருமில்லை
காமமென்பாருண்டு; துவைத விளக்கத்தோடு
அத்துவைதமும் உண்டு
தாமற்றுக் கலந்தால் அறிவீர் கோவிலூர்க்
கோமகன் தன்னை
98. உள்ளிலே உள்ளிய
ஒன்றை அடைவது எங்ஙனம் மக்காள்
வெள்ளமாய் ஆசை கொண்டோர் கடவுளைக்
காண்பதில்லை
உள்ளிலே அகந்தை இறப்பின் உயிர்ச்சுடர்
உள்ளில் காண்பீர்
தெள்ளவே தெரிவான் எங்கள் கோவிலூர்க்
கோமகன் உம்மில்
99. வான்புகழ்
தமிழ் வளர்த்த பாண்டியர்தம் திண்டீச்சரத்தில்
தான் விரும்பிப் புற்றில்ஏகி வெளிப்போந்து
அருளிய பெருமான்
தென்வேங்கடம் இதுவெனக்காட்டி இருதேவியோடு
அருட்கைநீட்டி
நின்றான் கோவிலூர்க் கோமகனாக ஓடிவந்தோம்
திருவடிதேடி
100. தேடி வந்ததோர்
நிதியம் கண்டு காதலாகிக் கண்ணீர் மல்கி
பாடி ஏத்தினேன் தமிழால் உன்னை; தென்பாண்டி
வேங்கடவா
கோடி கொடுப்பினும் கிட்டாத பேறு என்செய்து
நின்கடன் தீர்ப்பேன்
நாடி வந்தவர்க்குக் கோவிலூர்க் கோமகன்
இல்லையென்னா தருள்வான்
வானில் மதியும் இரவியும் கோளும் நிற்கப் பாண்டியர்
கோன் கோவிலூர்க் கோமகனை ஏழு திருமாளிகை
சீனிவாச தாதன் பத்தியொடு ஏத்திய தமிழ் ஐயிருபத்தும்
தானின்று செப்புவோர் நலமாய் இகமும் பரமும்
பெறுவரே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home