Tuesday, September 4, 2012

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்:


திரு சுஜாதா :

அவரது வேகத்தினால் ஈர்க்கப் பட்டாலும் அவர் எழுத்து ஆரம்பத்தில்  என்னைக் கோபப் படுத்தியது. சுஜாதாவின் எழுத்துக்களில் காதலைப் பற்றியும் மற்ற  மென்மையான உணர்ச்சிகளைப் பற்றியும் ஒரு மெல்லிய எள்ளல் இருக்கும்.இந்த கேலி முதலில்  என்னை  சுஜாதாவிடமிருந்து விலகி   நிற்கச் செய்தது

நைலான்  கயிறு” நாவலில் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளையும் அவளது தனிமையையும்  அதன் குரூரத்தையும் சொன்ன விதம் என்னைத் திகைக்க வைத்தது. ஒரு துப்பறியும் நாவலில் இளம் பெண்ணின் சைக்காலஜி!!  “பிரிவோம் சந்திப்போம்”  நாவலில் ஒரு காதலின் தீவிரத்தையும் sincerity ஐயும் சித்தரித்த அவர் எழுத்தின்  பால் ப்ரேமை கொண்டேன்

ஹென்றி அவருக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்; எனவே சுஜாதாவின் சிறு கதைகளைப் படிப்பவர்கள் அந்த கடைசி வரித் திருப்பத்தை எதிர் பார்க்கலாம். சுஜாதாவின்மத்யமர்” வரிசைச் சிறு கதைகள் மிகவும் பேசப் பட்டவை. பலரைக்  கோபப் படுத்தினாலும் மத்ய தர வர்க்கத்தை நுணுக்கமாக மிக நெருக்கமாக அப்பட்டமாகக்  காட்டியது அவர் எழுத்து.

ஆனால் சுஜாதாவின் துப்பறியும் நாவல்கள் தாண்டி அவரின் மேதைமையை  அறிந்து கொள்ள 
விழைவோர் அவரது non fictions வாசிக்க வேண்டும்.  ( - ம்)  "கணையாழி கடைசிப் பக்கம்" மற்றும்
 "கற்றதும் பெற்றதும்"  தவிர "ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்"  அவர் எழுதிய "தலைமைச் செயலகம்
(ஜூனியர் விகடன்) ஒரு handy reference book என்று சொல்லலாம்.அவர் நாவல்களை ஆழ்ந்து படித்தால் 
அதில் தெரியும் அவரது அறிவின் விஸ்தீரணத்தைப் புரிந்து கொள்ள  இயலும்.  அவரது வாசிப்பின்  பரப்பும் ஆழமும் புரியும்.  பிரமிப்பு நம்மை ஆட்கொள்ளும்

சுஜாதாவின் நகைச்சுவையில் ஒரு ப்ரத்யேகம் உண்டு. அது அவரது subtlety. அதாவது  ஆரவாரமில்லாத 
உட்பொதிந்த நகைச் சுவை.
 " உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் இன்னும் இல்லை என்பார்கள்"
"வேட்டி எனக்குப் பழக்கமில்லை. தவிர தடுக்கி மேடையில் உள்ளோரை அனாவசியமாய் விழுந்து 
சேவிக்கும் அபாயம் இருந்தது
சுஜாதாவின் எழுத்து தேங்காய் போன்றது. அவரது உண்மையான ருசியை அறிய நம் பங்கில் 
கொஞ்சம் முயற்சி வேண்டும். அதாவது நம் அறிவை நாம் உயர்த்திக் கொள்ளல் அவசியம் 

சுஜாதாவைப்போல்  பல்துறை  அறிவும் மொழிப் புலமையும் கொண்ட எழுத்தாளரைக் காண்பது அரிது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home